TASMAC: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக வரும் புகார்களை அடுத்து, ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2 Min read
Published : May 14 2026, 04:44 PM IST
16

Image Credit : Asianet News
மதுவிற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்கள் முதல் பெண்கள் என அனைவரின் மத்தியில் மதுக்குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நண்பர்களோடு வெளியே செல்வது முதல் அலுவலக மீட்டிங் வரை மதுபானம் கொண்டாட்டம் இல்லாமல் நடைபெறுவது இல்லை. இதன் காரணமாக மது விற்பனை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. தமிழகத்தில் 4,700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு 100 முதல் 120 கோடி அளவுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
26
Image Credit : Asianet News
அந்த வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி உதவி திட்டங்களுக்கு நிதியை வாரி வழங்கும் பொக்கிஷமாக டாஸ்மாக் உள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவே ஒரு புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோரி பல முறை மதுபிரியர்கள் புகார் அளித்தனர்.
36
Image Credit : our own
இதனையடுத்து பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் மதுபானக்கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தததை அடுத்து டாஸ்மாக் ஊழியர்களை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
46
Image Credit : Asianet News
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
56
Image Credit : our own
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
66
Image Credit : Asianet News
முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார். இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)
49 minutes ago
8





English (US) ·