Last Updated:May 12, 2026 10:25 AM IST
TASMAC | தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும் என ஆணை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், பள்ளிக்கூடங்கள் சுற்றி 500 மீட்டர் வரை உள்ள கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 276 கடைகளும், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 186 கடைகளும், பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான கடைகளை அடுத்த 2 வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முதல் 3 கையெழுத்திலேயே போதைக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்போது 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, கடந்த திமுக ஆட்சியிலும் இதேபோல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள், கோயம்புத்தூர் மண்டலத்தில் 78 கடைகள், மதுரையில் 125 கடைகள் மற்றும் திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் என மொத்தம் 500 கடைகள் அப்போது மூடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தெந்த மண்டலங்களில் எங்கெங்கே மூடப்பட்டுள்ளது என்கிற விவரம் தமிழக அரசு வெளியிடவில்லை.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
First Published :
May 12, 2026 10:25 AM IST
.png)








English (US) ·