தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மீண்டும் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு நிர்ணயித்த விலையை அமல்படுத்தி இந்த வசூல் வேட்டையை தடுப்பது யார் என்று குடிமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
2 Min read
Published : Jul 23 2026, 09:35 AM IST
18

Image Credit : Asianet News
கூடுதல் வசூலை தடுப்பது யார்?
தமிழகத்தில் மதுபான விற்பனையை முழுமையாக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும், சில டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மீண்டும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், "அரசு நிர்ணயித்த விலை எங்கே? கூடுதல் வசூலை தடுப்பது யார்?" என்ற கேள்வியை குடிமக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
28
Image Credit : Asianet News
சம்பள உயர்வுக்குப் பிறகும் தொடரும் புகார்கள்
சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வெளியாகியுள்ளன.
38
Image Credit : Asianet News
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல்?
வாடிக்கையாளர்கள் கூறுவதன்படி, சில டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டால், "இப்படித்தான் இருக்கும்" என்ற பதில் கூறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில வாடிக்கையாளர்கள், கூடுதல் தொகைக்கு பதிலாக தேவையில்லாத கேரி பேக் கொடுக்கப்படுவதாகவும், அதற்காகவே கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். பலர் பை தேவையில்லை என்று கூறினாலும் கூட, கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
48
Image Credit : Asianet News
ரசீதிலும் கூடுதல் தொகை?
சென்னையில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்ட ரசீதுகளிலும் கூடுதல் தொகை இடம்பெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். சிலர் அதிகாரப்பூர்வ கூகுள் பே மூலமாகவே பணம் செலுத்தியதாகவும், அதற்கான பதிவுகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த விவகாரம் தனிப்பட்ட புகாராக அல்லாமல், கண்காணிக்க வேண்டிய பிரச்சினையாக மாறியுள்ளது.
58
Image Credit : Asianet News
குடிமக்களின் கேள்வி
அரசு விலையை நிர்ணயித்துள்ள நிலையில் ஏன் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது? ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு இருக்கும்போதும் இது எப்படி தொடர்கிறது? ரசீது வழங்கப்பட்ட பிறகும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது எப்படி? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
68
Image Credit : Asianet News
விழிப்புணர்வு பலகைகள் அவசியம்
பல டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலை பட்டியல், கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை, புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் போன்ற தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு தெளிவாக வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதுபோன்ற தகவல்கள் அனைத்து கடைகளிலும் கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
78
Image Credit : Asianet News
புகார் அளிக்கலாம்
டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளதன்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் 94981 80903 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
88
Image Credit : Asianet News
ஆட்சி மாறினாலும் காட்சகள் மாறவில்லை.!
அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்பது சட்டமும், வாடிக்கையாளர்களின் உரிமையும் ஆகும். சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் தொடர்வது கவலை அளிக்கிறது. கண்காணிப்பை தீவிரப்படுத்தி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வெளிப்படையான விற்பனை நடைமுறையை உறுதி செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுவரை, "மீண்டும் பாட்டிலுக்கு ரூ.10... வசூல் வேட்டையை தடுப்பது யார்?" என்ற கேள்வி குடிமக்களின் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
.png)
59 minutes ago
11








English (US) ·