Last Updated:Jul 21, 2026 2:22 PM IST
ஆர்வமுள்ளவர்கள் தேசிய தொழில்பழகுநர் பயிற்சி திட்ட (NATS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டம், டிப்ளமோ மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பொதுப் பட்டப்படிப்புகளை முடித்த தமிழக இளைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் நிறுவனத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் (Apprenticeship) பயிற்சியில் சேர அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் மற்றும் தொழில்பழகுநர் பயிற்சி வாரியம் (BOAT – Southern Region) இணைந்து, தகுதியான பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ மாணவர்களிடமிருந்து இணையவழியாக விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
2022, 2023, 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பொறியியல் பட்டப்படிப்பு (CSE, Mechanical, Automobile, Civil, EEE, IT), டிப்ளமோ மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பொதுப் பட்டப்படிப்புகளை (BA, B.Sc., B.Com. உள்ளிட்டவை) முடித்த தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்த ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் நிறுவனத்தின் விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மண்டலங்களில், தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தேசிய தொழில்பழகுநர் பயிற்சி திட்ட (NATS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் Home Page → Regional Events → BOAT (Southern Region) Apprentice News பகுதியில் தெரிந்துகொள்ளலாம். இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் 28.08.2026 என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Viluppuram,Viluppuram,Tamil Nadu
.png)






English (US) ·