சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து
2 Min read
Published : May 16 2026, 11:36 AM IST
14

Image Credit : Asianet News
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், விடுதிகள் அருகே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : Asianet News
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக துணியை கட்டி மறைத்திருக்கிறார். ஆனால், வாசனை விஷயத்தில் அவர் கோட்டை விட்டிருக்கிறார். கஞ்சா செடியில் ஒரு விதமான வாசனை அவரை காட்டி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
34
Image Credit : Asianet News
அப்போது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44
Image Credit : ANI
அதேபோல் சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்படிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீட்டில் நுழைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில்: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
.png)
53 minutes ago
9






English (US) ·