TVK Vijay Cabinet | தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுமா? செல்வப்பெருந்தகை சொன்ன பதில்!

1 hour ago 12

Last Updated:May 09, 2026 7:44 AM IST

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியிருக்கும் நிலையில், தவெக-வில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 108 இடங்களில் தவெக வென்றது. அதில் தவெக தலைவர் விஜய் 2 இடங்களில் வெற்றி பெற்றதால், 107 என்று அந்த எண் மாறியது. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், முதற்கட்டமாக 5 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்தது தவெக.

 இதற்காக மே 6-ல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. தொடர்ந்து அன்றைய தினமே அவசர அவசரமாக காணொலி மூலமாக நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை வழங்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

 இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கும் வகையில் அமைச்சரவையில் காங்கிரஸூக்கு இடம் வழங்க வேண்டும், அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறப்பட்டது.

 இந்நிலையில் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவது என்பது குறித்து காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது தெரிவித்துள்ளார்.

 சென்னையில் நேற்று (மே 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம் என்றும் கூறினார். இத்துடன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக அரசியல் நிலவரங்களை ராகுல் காந்தி கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். (கோப்புப்படம்)

 திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியிருக்கும் நிலையில், ’இந்தியா’ கூட்டணி வலுவாக இருப்பதாகவும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

ரூ.410 போதும்.. கைக்கு ரூ.71 லட்சம் வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஜாக்பாட்!

SSY Scheme | ரூ.410 போதும்.. கைக்கு ரூ.71 லட்சம் வரும்!

  • தினமும் ரூ.410 சேமித்தால் 21 ஆண்டில் ரூ.71.82 லட்சம் கிடைக்கும்.

  • ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது; வரிவிலக்கும் உண்டு.

  • 10 வயதுக்குள் கணக்கு தொடங்கி, கல்வி, திருமண செலவுக்கு பயன்படுத்தலாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article