Last Updated:May 09, 2026 10:44 PM IST
60 ஆண்டுகாலமாக அதிகாரத்தை ருசிக்காத காங்கிரஸ் தொண்டர்களுக்கு தான் இந்த 2026 தேர்தல் தான் உண்மையான விடியலாக அமைந்ததுள்ளது

தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு என்பது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த முதல் கட்சி திமுக. நாட்டிலேயே முதன் முறையாக திமுக என்ற பிராந்திய கட்சி தான் காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்தி மாநிலத்தின் அதிகாரத்தை கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், அதன் பிறகு கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழக அமைச்சரவையின் ஆட்சி அதிகாரத்துக்குள் நுழைய முடியாமல் போனது. திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி அமைத்தாலும் அமைச்சரவையில் அதற்கு இடம் கிடைத்ததில்லை. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அந்த நீண்ட காலத் தடையை உடைத்து, காங்கிரஸை மீண்டும் கோட்டைக்குள் அழைத்துச் செல்கின்ற்ன.
1967 முதல் இன்று வரை தமிழக அரசியல் களம் திமுக மற்றும் அதிமுக என்ற இரு பெரும் துருவங்களைச் சுற்றியே சுழன்று வந்தது. 1977-க்குப் பிறகு இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியமைத்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்காமல் 'தனிப்பெரும்பான்மை - ஒற்றைக்கட்சி ஆட்சி' என்ற மரபையே பின்பற்றி வந்தன. 2006-இல் திமுக-விற்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலிலும், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்ததே தவிர, அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல், தமிழகத்தின் இந்த மரபான அரசியல் போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவை காங்கிரஸ் கட்சி கொடுத்தது. தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு சென்றது.
காங்கிரஸ் கட்சி 'வெளியிலிருந்து ஆதரவு' என்ற நிலையைக் கடந்து, தவெக அமைச்சரவையில் நேரடியாகப் பங்கெடுக்க முடிவு செய்துள்ளது. இது, 1967-க்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கும் முதல் நிகழ்வாக அமையவுள்ளது.
இந்த மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணம், தமிழகத்தில் பல தசாப்தங்களாக நிலவி வந்த இருமுனை அரசியல் உடைந்ததுதான். 1977 முதல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வந்தன. ஆனால், இம்முறை விஜய்யின் தவெக 34 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், இரு திராவிடக் கட்சிகளின் மொத்த வாக்கு வங்கி 50 சதவீதத்திற்குக் கீழ் சரிந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் 'அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டணி ஆட்சியை' விரும்புவதை உணர்த்துவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. எனினும், காங்கிரஸ் கட்சி மட்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதன் மூலம், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது. அமைச்சரவைப் பட்டியலில் காங்கிரஸின் பெயர்கள் இடம்பெறப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாத் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
60 ஆண்டுகாலமாக அதிகாரத்தை ருசிக்காத காங்கிரஸ் தொண்டர்களுக்கு தான் இந்த 2026 தேர்தல் தான் உண்மையான விடியலாக அமைந்ததுள்ளது.1967-இல் முதல் மாநில சுயாட்சி கோட்பாடுகளை முன்வைத்து திராவிட கட்சிகள் மட்டும் அமைச்சரவையை தக்க வைத்த நிலையில், தற்போது முதன்முறையாக தேசியக் கட்சியும் மாநில கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தும் ஒரு புதிய பரிசோதனைக் களமாகத் தமிழகம் மாறியுள்ளது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)








English (US) ·