Urvil Patel: சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் லக்னோவுக்கு எதிரான போட்டியில் வெறும் 13 பந்துகளில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் துண்டுசீட்டில் என்ன எழுதி இருந்தார்? என்பது குறித்து பார்ப்போம்.
2 Min read
Published : May 10 2026, 08:31 PM IST
14

Image Credit : x
லக்னோவை வீழ்த்திய சிஎஸ்கே
IPL 2026 தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் உர்வில் படேலின் அதிரடி பேட்டிங் தான் இப்போது ஹாட் டாபிக். வெறும் 13 பந்துகளில் 50 ரன்களை விளாசி, கிரிக்கெட் உலகில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், யுவராஜ் சிங்கின் 12 பந்து அரைசத சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : Urvil Patel/Instagram
லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கிய உர்வில்
உர்வில் படேல், லக்னோ அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் ஒரு கை பார்த்தார். முதலில் ஆவேஷ் கான் ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்தார். அடுத்து வந்த ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தியையும் விட்டுவைக்கவில்லை. லக்னோ அணியின் அனுபவ பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்திலும் சிக்ஸர் விளாசி, மைதானத்தை நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்டார். மொத்தமாக 23 பந்துகளைச் சந்தித்த உர்வில் படேல், 2 பவுண்டரிகள் மற்றும் 8 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்தார்.
IPL-ல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனையை சமன்
வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததன் மூலம், IPL வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை உர்வில் படேல் சமன் செய்துள்ளார். ஆட்டம் தொடங்கியதும் களமிறங்கிய இவர், ஆவேஷ் கான் வீசிய முதல் 3 பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அதன்பிறகும் அவரது அதிரடி நிற்கவில்லை. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாகப் பறந்தன. தனது அரைசதத்தில் மட்டும் 7 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்திருந்தார்.
34
Image Credit : X
கையில் வைத்திருந்த சீட்டில் என்ன இருந்தது?
27 வயதான உர்வில் படேல், அரைசதம் அடித்த பிறகு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய சீட்டை எடுத்து, வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அந்த சீட்டில் அவர் தனது அப்பாவிற்காக ஒரு செய்தியை எழுதி எடுத்து வந்திருந்தார். அதில், "அப்பா, இது உங்களுக்காக. நீங்க என்ன விரும்பினீங்களோ, அதை நான் செஞ்சு காட்டிட்டேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
44
Image Credit : BCCI
யார் இந்த உர்வில் படேல்?
உர்வில் படேல் குஜராத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதனால், இளம் வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங் ஆகியவை இவரது மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, படிப்படியாக கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
உள்ளூர் T20 போட்டிகளில் பலமுறை அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் வேகமாக ரன் குவிப்பதில் இவர் கில்லாடி. சையத் முஷ்டாக் அலி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் இவரது பேட்டிங், தேர்வாளர்களையும் IPL அணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவரது அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் தான், மற்ற இளம் வீரர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டுகிறது.
.png)
1 hour ago
11








English (US) ·