“எதிரிக்கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்…” - உதயநிதி ஸ்டாலின்

58 minutes ago 13

Last Updated:May 10, 2026 9:45 PM IST

உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் - உதயநிதி
விஜய் - உதயநிதி

தமிழ்நாடு முதலமைச்சராக இன்று தவெக தலைவர் ஜோசப் விஜய்யும், தற்காலிக சபாநாயகராக கருப்பையாவும் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, நாளை எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில், திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான மு.க. ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி.


தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும்,…


— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 10, 2026

கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.

Read Entire Article