Vaibhava Lakshmi Raja Yoga : வைபவ லட்சுமி ராஜ யோகத்தால் குபேர யோகத்திற்கு இணையான பலன்களை நான் ஸ்டாப் ஆக பெறப்போகும் 5 ராசிகள்!

1 hour ago 12

Moon-Venus Conjunction : கன்னி ராசியில் சுக்கிரன், சந்திரன் மற்றும் கிரகங்கள் இணைந்து வைபவ லட்சுமி ராஜயோகத்தை உருவாக்கும். இது சில ராசிகளின் நிதிச் சிக்கல்களை நீக்கும். அது என்னென்ன ராசிகள் என்பதை பார்க்கலாம்.

2 Min read

Published : Jul 22 2026, 08:24 AM IST

16

Vaibhava Lakshmi Raja Yoga

Image Credit : AI Image

Vaibhava Lakshmi Raja Yoga

வேத ஜோதிடத்தில் மிக வேகமாக நகரும் கிரகமாகக் கருதப்படுவது சந்திரன். சுமார் இரண்டரை நாட்களுக்கு ஒரு ராசியில் தங்கும் சந்திரன், தனது வேகமான சஞ்சாரத்தால் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறது.

அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.34 மணியளவில் சந்திரன் கன்னி ராசியில் நுழைகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரித்து வருவதால், இந்த இரு கிரகங்களின் இணைவால் வைபவ லட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. சுமார் இரண்டரை நாட்கள் நீடிக்கும் இந்த யோகம், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

26

தனுசு

Image Credit : AI Image

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கக்கூடும். அதிர்ஷ்ட ஸ்தானத்தில் உருவாகும் இந்த கிரகச் சேர்க்கை, நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்களை நிறைவேற்ற உதவும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும்.

தொழில் அல்லது வேலை தொடர்பாக தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உடல்நிலையும் உற்சாகமாக இருப்பதால், முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்கலாம்.

36

விருச்சிகம்

Image Credit : AI Image

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக அமையும். லாப ஸ்தானத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவதால் எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வருமான உயர்வு ஏற்படலாம். சேமிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகும். தம்பதியரிடையே புரிதல் மேம்பட்டு, குடும்ப உறவுகள் வலுப்பெறும். ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

46

துலாம்

Image Credit : AI Image

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வைபவ லட்சுமி ராஜ யோகம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் புதிய தொழில் அல்லது முதலீட்டு முயற்சிகளைத் தொடங்கலாம்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானத்தில் முன்னேற்றம் காணப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பும் உள்ளது.

சரியான உணவுமுறை மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றினால், இந்த காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

56

மிதுனம்

Image Credit : AI Image

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். கலை, சினிமா, ஊடகம் மற்றும் படைப்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

வியாபாரத்தில் லாபம் உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குடும்ப தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உழைத்த முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கலாம். வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பும் உருவாகும். அதே நேரத்தில், செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் நிதி திட்டமிடலில் கவனம் செலுத்துவது நல்லது.

66

மேஷம்

Image Credit : AI Image

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய வீடு கட்டுவது அல்லது சொத்து வாங்குவது தொடர்பான முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கலாம். வாகனம் வாங்கும் வாய்ப்பும் உருவாகும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கைத் தரம் மேம்பட்டு, ஆடம்பர வசதிகளை அனுபவிக்கும் சூழல் உருவாகலாம்.

வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். உடல்நலம் சீராக இருந்து, உங்கள் பேச்சுத் திறன் பிறரை எளிதில் கவரும்.

Read Entire Article