Last Updated:Mar 02, 2026 5:28 PM IST
விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜயின் சொத்து மதிப்பு ரூ.600 கோடி என கூறப்படுகிறது. இதிலிருந்து சங்கீதாவுக்கு எத்தனை கோடி ஜீவனாம்சம் கிடைக்கும்? அவருடைய சொத்து மதிப்பு என்ன? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.
விஜய் மனைவி சங்கீதாவை பொறுத்தவரை அவர் இலங்கை தமிழர். லண்டனில் செட்டில் ஆனவர். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம், லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். சங்கீதாவை பொறுத்தவரை, அவர் படித்தது எல்லாம் லண்டனில் தான். கடந்த 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்து விஜயை பாராட்டுவதற்காக சென்னை வந்தார் சங்கீதா.
அப்போது, விஜயை சந்தித்ததுடன் அவர்களது பெற்றோரையும் சந்தித்து பேசியிருந்தார் சங்கீதா. இது தான் விஜய் - சங்கீதா திருமணத்துக்கான தொடக்கப்புள்ளி. அதன்பிறகு சங்கீதாவை விஜய்க்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் விருப்பம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு மனைவியை காதலிக்க தொடங்கியதாக விஜய் முந்தைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ.400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் சினிமா வருமானத்தால் சங்கீதாவுக்கு கிடைத்த சொத்து அல்ல இது. சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கத்திடமிருந்து அவருக்கு கிடைத்த பரம்பரை சொத்து தான் இந்த ரூ.400 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் தொழில் முதலீடுகள், நிலங்கள், வீடுகள் என முக்கிய சொத்துகள் சங்கீதாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு முன்பே சங்கீதா பணக்கார பெண் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார ரீதியாக விஜயின் அன்றைய சொத்துக்கு இணையானவராக இருந்திருக்கிறார் சங்கீதா. திருமணத்துக்குப் பின் வீட்டை கவனித்துக் கொள்வது, குழந்தைகள் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.
சங்கீதா சிறந்த மருமகள் என்று விஜயின் தாயும், தந்தையும் பழைய பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தனர். விஜய் சொத்து மதிப்பு ரூ.600 கோடி என்றும், சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ.400 கோடி என்றும் கூறப்படுகிறது. விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சங்கீதாவுக்கு சாதகமாக வந்தால் விஜய் மாதாந்திர தொகையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையையோ சங்கீதாவுக்கு கொடுக்க நேரிடும் என கூறப்படுகிறது.

School Leave announcement | நாளை (மார்ச் 3 ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 3 அன்று புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்; தேர்வு நடைபெறும் பள்ளிகளில் மட்டும் ஏற்பாடுகள் செய்யப்படும்
மாணவர்கள் தேர்வு அட்டவணையை கவனத்தில் கொண்டு தயாராக இருக்குமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
.png)






English (US) ·