Weather Report : தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்த மாவட்டம் எது தெரியுமா ?

3 hours ago 17

Last Updated:October 14, 2025 10:30 AM IST

காற்று சந்திப்பு காரணமாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. 

+

தென்காசியில்

தென்காசியில் மழை

காற்று சந்திப்பு காரணமாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேக்கரை, கடையநல்லூர், சுரண்டை, பாவூர்சத்திரம், ஆய்க்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.  நேற்று இரவு (அக்.13 )  8 மணி நிலவரப்படி தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான மழை, தென்காசியில் 82 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் மீண்டும் மழை மேகங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு மீண்டும் மழை பெய்யும் எனவும் மேலும் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தென்காசி வானிலை ஆய்வாளர் ராஜா எச்சரித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே, தென்காசி, சங்கரன்கோவில் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ள சூழலில், மாலை கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.  குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வளர்த்த இடி மின்னலுடன் நெல்லை தென்காசி தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார் தென்காசி வானிலை ஆய்வாளர் ராஜா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 14, 2025 10:30 AM IST

Read Entire Article