“ஆச கூட பாடலில் இவரை தான் நடிக்க வைக்க நினைத்தேன்” - சாய் அபயங்கர்

3 hours ago 2

Last Updated:October 14, 2025 1:23 PM IST

“'ஆச கூட...' பாடலில் இவரை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது” என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். 

News18
News18

“'ஆச கூட...' பாடலில் மமிதாவை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது” என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், “ரொம்பவே எமோஷனலாக உள்ளது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய 'கட்சி சேரா' பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கீர்த்தி என்னிடம் கதை சொன்னார். உடனே, அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது ஸ்பெஷலாக உள்ளது.

பிரதீப் ப்ரோ, கீர்த்தி ப்ரோ, மமிதா, என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. 'ஆச கூட...' பாடலில் மமிதாவை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.

First Published :

October 14, 2025 1:23 PM IST

Read Entire Article