குவஹாட்டி: மே 12 –
வடகிழக்கு மாநிலமான அசாம்
சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமந்தா பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக அசாம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக, சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தது.
அஸ்ஸாம் மாநிலம், குவஹாட்டி, கானாபாராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அஸ்ஸாம் ஆளுநர் லட்சுமன் ஆச்சார்யா.அவர் புதிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத். உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பதிவை ஏற்ப விழாவில் பிஜேபி தொண்டர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமான பேர் பங்கேற்றனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.