அடேங்கப்பா.. லேப்டாப் வாங்க இவ்ளோ விஷயங்கள் இருக்கா? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

1 hour ago 18

laptop பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன? சிறந்த லேப்டாப் வாங்குவதற்கான வழிகாட்டி. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள், கோடிங், ப்ராஜெக்ட் வேலைகள் என அனைத்திற்கும் இது அவசியமாகிறது. எனவே லேப்டாப் வாங்கும் முன், உங்கள் பிள்ளைக்கு அது எதற்காகப் பயன்படப் போகிறது என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். சாதாரண பள்ளி வேலைகளுக்கு அடிப்படை மாடல்களே போதுமானது. ஆனால், கோடிங், கிராஃபிக் டிசைனிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப வேலைகளுக்கு அதிக திறன் கொண்ட லேப்டாப் தேவைப்படும்.

சிறப்பான செயல்திறனை தரும் ப்ராசஸரை தேர்வு செய்யுங்கள்

ஒரு லேப்டாப்பின் இதயம் அதன் ப்ராசஸர் (Processor) தான். அதுதான் லேப்டாப்பின் வேகத்தையும் செயல்திறனையும் தீர்மானிக்கிறது. நீண்ட கால பயன்பாட்டிற்கு Intel Core i3 அல்லது AMD Ryzen 3 ப்ராசஸர் கொண்ட லேப்டாப்களை தேர்வு செய்யலாம். மல்டி டாஸ்கிங் அல்லது கோடிங் செய்ய Intel Core i5 அல்லது Ryzen 5 சிறந்த தேர்வாகும். அதேசமயம், கேமிங் மற்றும் கனமான மென்பொருள்களை பயன்படுத்த i7 அல்லது Ryzen 7 ப்ராசஸர்கள் தேவைப்படும்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் எவ்வளவு தேவை?

குறைந்தபட்சம் 8GB RAM கொண்ட லேப்டாப்பை வாங்குவது நல்லது. எந்தவித தங்கு தடையுமின்றி லேப்டாப் பல ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும் என நினைத்தால் 16GB RAM வாங்குவது சிறந்தது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, பழைய ஹார்ட் டிரைவ்களை விட SSD-கள் மிக வேகமாக செயல்படும். எனவே, குறைந்தபட்சம் 512GB SSD உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி வசதி

மாணவர்கள் லேப்டாப்பை பள்ளி, கல்லூரி, லைப்ரரி என பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும் சார்ஜரை தேடி அலையாமல் இருக்க, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வலிமையான பேட்டரி திறன் கொண்ட லேப்டாப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

டிஸ்ப்ளே அளவு மற்றும் எடை குறைவான மாடல்

மாணவர்கள் எளிதாக சுமந்து செல்லும் வகையில் எடை குறைவான (1.6 கிலோவிற்கும் குறைவான) லேப்டாப்களை தேர்ந்தெடுப்பது நல்லது. 14-இன்ச் அல்லது 15.6-இன்ச் திரை அளவு கொண்ட லேப்டாப்கள் போதுமானவை. மேலும், தெளிவான பார்வைக்கு Full HD (1920x1080p) ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறந்த டிஸ்ப்ளே கண்களுக்கு ஏற்படும் சோர்வை கணிசமாக குறைக்கும்.

நீடித்து உழைக்கும் வடிவமைப்பு மற்றும் பட்ஜெட்

மாணவர்கள் பொருட்களை சற்று கடினமாக கையாளும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், லேப்டாப்பின் கீல்கள் (Hinges) உறுதியாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். 'ஸ்பில்-ரெசிஸ்டண்ட்' (Spill-resistant) கீபோர்டு கூடுதல் பாதுகாப்பை தரும். உங்கள் குடும்ப பட்ஜெட்டிற்கு ஏற்ற விலையில், சிறந்த உத்திரவாதம் (Warranty) வழங்கும் நம்பகமான பிராண்டுகளை தேர்வு செய்யுங்கள். கவர்ச்சியான தோற்றத்தை விட, செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Read Entire Article