அதிமுக, திமுக முதலமைச்சராக்க முயன்றதா? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

1 hour ago 15

Last Updated:May 12, 2026 3:39 PM IST

``திமுக, அதிமுக சேர்ந்து என்னை முதல்வராக்க அணுகினார்கள் எனவும் திமுக‌, அதிமுகவின் கோரிக்கையை நான் ஏற்கவில்லை'' எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்

"அதிமுக, திமுகவும் இணைந்து என்னை முதலமைச்சராக்க முயன்றதாக எனக்கும் தகவல் கிட்டியது என்றுதான் தெரிவித்தேன். திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை என விசிக தலைவர் திருமாவளவன், தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதில், பிணக்கு ஏற்பட்டபோது, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளிக்கலாம் என்ற திட்டம் தீட்டப்பட்டதாகவும் அது தோல்வி முடிவடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக, அதிமுக கூட்டணி அமைத்து உங்களை முதல்வராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ''அதிமுக, திமுக மற்றும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிட்டியது. நாங்கள் இடதுசாரிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையை முன்வைத்து எங்கள் உயர்நிலைக்குழுவில் விவாதித்து அதன்பின்பு தான் முடிவெடுத்தோம்.

இடதுசாரிகளின் முடிவின் அடிப்படையிலேயே எங்களை முடிவை அறிவித்தோம் எனவும்  குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால் ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே ஆதரவு அளித்துள்ளோம். திரைமறைவில் எந்த பேரமும் பேசவில்லை." எனவும் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்தார்.

எல்லோரும் அது தாமதமான முடிவு என்று விமர்சிக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறவர்க்கு தான் முடிவெடுப்பதில் உள்ள சிரமம் புரியும். உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை எடுக்க முடியாது. தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளோம். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையும் அப்படியே தான் உள்ளது'' என்று தெரிவித்தார்.


இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.

அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல்…


— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 12, 2026

இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:-

இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன். எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை. நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன்.

ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை. தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது.

இதையும் படிங்க: “திமுக தோழமை இயக்க உறுப்பினர்கள் ஆதரவோடு அமைந்துள்ள அரசுக்கு வாழ்த்துகள்” - உதயநிதி ஸ்டாலின்

ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான். எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன். அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Read Entire Article