அன்னையர்க்கு அர்த்தமுள்ள அன்புப் பரிசு

46 minutes ago 9

ae1bb517-9fbe-4050-9f31-892c3314394c

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. - படம்: கி.ஜனார்த்தனன்

அன்னையர் தினத்தை ஒட்டி ‘காலை நேர ஒன்றுகூடல்’ (Morning Mingle) சிற்றுண்டி நிகழ்ச்சியில் திரண்ட நீ சூன் வட்டாரவாசிகள் ஒருவரோடு ஒருவர் பழகி மகிழ்ந்தனர்.

மே 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீ சூன் சென்ட்ரல் வட்டாரத்தின் வசிப்போர் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 120 பேர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தாய்மார்களின் அன்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் கவிதை ஒன்றும் வாசிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் அடித்தள ஆலோசகருமான கோ ஹன் யென் கலந்துகொண்டார். 

நிகழ்ச்சியில் ஸ்பிரிங்லீஃப் உணவகத்தின் நேரடி பரோட்டா தளம் அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் ஸ்பிரிங்லீஃப் உணவகத்தின் நேரடி பரோட்டா தளம் அமைக்கப்பட்டிருந்தது. - படம்: கி. ஜனார்த்தனன்

“உணவு மக்களை இயற்கையாகவே ஒன்றிணைக்கிறது. இதுபோன்ற காலை நேர ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள், குடியிருப்பாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும், நட்பை வளர்க்கவும், நீ சூன் சென்ட்ரல் வட்டாரத்தில் சமூக உணர்வை வலுப்படுத்தவும் தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம்,” என்று அடித்தள ஆலோசகர் கோ ஹன்யான் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் ஸ்பிரிங்லீஃப் உணவகத்தின் பரோட்டா கூடம் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட ஒவ்வொரு குடியிருப்பாளரும் $2 கட்டணம் செலுத்தி சாக்லேட், சீஸ், முட்டை, ரோட்டி போம் உள்ளிட்ட 12 வகையான பரோட்டாக்களில் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைத்தனர். அவற்றுடன் மசாலாத் தேநீர் அல்லது எலுமிச்சைச் சாறும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு குடியிருப்பாளரும் $2 கட்டணம் செலுத்தி சாக்லேட், சீஸ், முட்டை, ரோட்டி போம் உள்ளிட்ட 12 வகையான பரோட்டாக்களில் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைத்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு குடியிருப்பாளரும் $2 கட்டணம் செலுத்தி சாக்லேட், சீஸ், முட்டை, ரோட்டி போம் உள்ளிட்ட 12 வகையான பரோட்டாக்களில் தங்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைத்தனர். - படம்: கி.ஜனார்த்தனன்

நிகழ்ச்சி குறித்துப் பேசிய வட்டாரவாசி லிண்டா, “ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு வகையான பரோட்டாக்களையும் பானங்களையும் குடியிருப்பாளர்கள் ஒன்றாக அமர்ந்து சுவைத்ததுடன், தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு மகிழ்ச்சியளித்தது,” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. - படம்: கி.ஜனார்த்தனன்

குடியிருப்பாளர்களின் புன்னகையும், கலந்துரையாடல்களும், அவர்கள் தெரிவித்த பாராட்டுகளும் நிகழ்ச்சியை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியதாக ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வசிப்போர் கட்டமைப்பின் தலைவர் சாந்தா ராமன் தெரிவித்தார்.

“பலரது கைகளும் மனங்களும் இதற்காக இணைந்தன,” என்று அவர் கூறினார். 

Read Entire Article