அப்துல் கலாம் பெயரை வைத்து பிச்சை எடுத்தவன் நீ..! வாடா போடா என்று கடுமையாக சண்டை போட்ட அதிமுக கோவை சத்யன்- பொன்ராஜ்

3 hours ago 7

அதிமுக செய்தி தொடளார்பளர் சத்யன் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தனியார் விவாத நிகழ்ச்சியில் காரசாரமாக மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் உட்பட பெரும்பாலான செய்தி தொலைக்காட்சிகளில் இரவு நேரங்களில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக விவாதம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதன்படி பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் அண்மையில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக செய்தி தொடர்பாளரும், அதிமுக ஐடி விங் வடக்கு மண்டல செயலாளருமான கோவை சத்யன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் உள்பட மேலும் சில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விவாதத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் விமர்சகர் பொன்ராஜ் விமர்சித்து பேசினார். இதற்கு எதிர்வினையாற்றிய கோவை சத்யன், “மக்களால் விரும்பப்பபடுகிற, பிரபலமான ஆளுமையிடம் உதவியாளராக பணியாற்றும் நபர், அந்த ஆளுமையின் மறைவுக்கு பின்னர் ஆளுமையின் இடத்திற்கு வரமுடியாது. மேலும் ஆளுமைக்கு கிடைத்த மரியாதை அவரது உதவியாளருக்கு கிடைக்காது. இது தான் உண்மை” என்று பொன்ராஜ்ஐ மறைமுகமாக தாக்கத் தொடங்கினார்.

கோவை சத்யன் தன்னை தான் விமர்சிக்கிறார் என்பதை உனர்ந்துகொண்ட பொன்ராஜ், நீட்டை ரத்து செய்யும் இடத்தில் பாஜக தான் உள்ளது. அவர்களுடன் தான் நீங்கள் தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். நீட்டை ரத்து செய்துவிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க செல்லுங்கள். இல்லை யென்றால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்க சேகரிக்க செல்வீர்கள் என்று ஒருமையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை கேட்டு சற்றும் சலைக்காத கோவை சத்யன், மரியாதைக்குரிய அப்துல்கலாமின் பெயரை வைத்து பிச்சை எடுக்கும் நீங்கள் எங்களை விமர்சிக்க தகுதியற்றவர் என்று கூறி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இருவர் இடையேயான காரசார விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article