'அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H-1B விசாதாரர்களே' - ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

17 hours ago 8

சில விசாதாரர்களுக்கு அமெரிக்காவைத் தாண்டி வெளியே செல்ல வேண்டாம் என்று ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

Published:Just NowUpdated:Just Now

ஹெச்-1பி விசா |H-1B visa

ஹெச்-1பி விசா |H-1B visa

விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.

இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறது.

ஹெச்-1பி விசா உள்ளிட்ட சில‌ விசாக்கள் வைத்திருக்கும் பணியாளர்களை அமெரிக்காவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தி உள்ளது.

ஆப்பிள் - கூகுள்

ஆப்பிள் - கூகுள்

என்ன காரணம்?

குறிப்பிட்ட பணியாளர்கள் அமெரிக்காவைத் தாண்டி வேறு எங்காவது சென்றால், அவர்கள் மீண்டும் விசா ஸ்டாம்பிங் பெற, 12 மாதங்கள் வரை ஆகலாம்.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். இதனால், அவர்களது பணி தடைப்படலாம்.

12 மாத காலம் வரையிலான தாமதத்திற்கு சமூக வலைதள சோதனையை மிக முக்கியமாகக் கூறுகிறது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

Read Entire Article