விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், நடுத்தர மக்கள் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு இன்றும் அது, ஏதேனும் ஒரு காரணங்களால் எட்டாக்கனியாகவே உள்ளது…
அதுபோன்று அரசுபள்ளி மாணாக்கர்களின் கனவுகளும் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சிறப்புதேர்வு நடத்தி, அதில் வெற்றிபெற்ற மாணாக்கர்களை தங்களது சொந்தசெலவில் விமானத்தில் அழைத்துச்சென்ற ஒரு மகிழ்வான நிகழ்வு இன்று நடந்தேறி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய பள்ளிகுழந்தைகளின் கனவுகளை நினைவாக்கியுள்ளனர் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் மற்றும் சக ஆசிரியர் பெருமக்கள்.
இதற்காக 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளிகுழந்தைகளுக்கு சிறப்பு தேர்வும், வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு,ஒவ்வொரு வகுப்பிலும் அதில் வெற்றிபெற்ற தலா இருவர் வீதம் 12 மாணவ, மாணவிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
இன்று காலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இதுவரையிலும் கண்டிராத பூரிப்புடன், முதன்முறையாக விமானத்தில் பயணிக்கபோகும் அந்த உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
பெங்களூருவில் … பெங்களூர் சட்டமன்றம், விஸ்வேசர்ய்யா மியூசியம், திப்புசுல்தான் அரண்மனை, லால்பார்க் போன்ற இடங்களை சுற்றி பார்த்து அங்குள்ள மக்களிடம் உரையாடி மகிழ்ந்து பின்னர் தமிழகம் திரும்புகின்றனர்.
இந்த சுற்றுலாமூலம், மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்தவும், மற்ற மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளவும் நமது அரசுபள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பாகவும் அதேநேரம் அவர்க
தலைமையாசிரியர்
ளின் விமான பயணம் கனவும் நனவாகிறது என்கிறார் தலைமையாசிரியர் முத்துக்கருப்பன்…
இதுபோன்று முகமறியா பலரும் முன்வந்தால்… எத்தனையோ ஏழை மாணாக்கர்களின் இந்த விமான பயணம் மட்டுமல்ல, அவர்களின் உயர்கல்வியும் வசமாகும் … “தமிழகம் நிச்சயம் தலைநிமிரும் என்றாவது ஒருநாள்…”
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
.png)







English (US) ·