'ஜனநாயகன்' படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா படம் பற்றிய தகவல்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
Published:3 mins agoUpdated:3 mins ago

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான்.
ஆனால், இந்த ரீமேக்கில் சில புதிய விஷயங்களையும் ஹெச்.வினோத் சேர்த்திருக்கிறார்.
இப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா படம் பற்றிய தகவல்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Jana Nayagan - Vijay
அந்தப் பேட்டியில், "விஜய் சார் இப்போது முதல்வராகிவிட்டார். 'ஜனநாயகன்' என்ற தலைப்பை வைக்கும்போது, இதெல்லாம் நடக்கும் என உங்களுக்குத் தோன்றியதா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கே. வி. என். வெங்கட நாராயணா, "(சிரித்துக்கொண்டே) மேடம், நீங்கள் அப்படிப் பார்த்தால் பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போலத்தான் இருக்கும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எங்கள் யாருக்கும் அப்படித் தோன்றவில்லை.
ஆனால், இப்போது பின்நோக்கிப் பார்த்து எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால், உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது. பூஜை விழாவின்போது கூட நான் பேசும்போது, 'இது விஜய் சாரின் கடைசிப் படம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் நாம் #OneLastTime என்ற ஹேஷ்டேக்குடன் விஜய் சாருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குவோம்' என்று பேசினேன்.

அப்படிப் பேசும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாது. ஆனால், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து நாங்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாகவே உணர்ந்தோம்.
அதைவிட முக்கியமான ஒன்று, 'ஜனநாயகன்' என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தோம். அதில் 'Torch Bearer of Democracy' என்று போட்டிருந்தோம்.
அதற்குப் பிறகுதான் 'ஜனநாயகன்' என்ற தலைப்பே வெளியானது. இப்போது வரிசையாகப் பார்த்தால் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு ஒரு கதை போல இருக்கிறது.
மக்கள் அனைவருமே அவர் ஒரு நிஜமான 'ஜனநாயகனாக' வரவேண்டும் என்று விரும்பினார்கள். அது வெறும் படத்தோடு நின்றுவிடாமல் நிஜத்திலும் நடந்துவிட்டது!" எனப் பகிர்ந்திருக்கிறார்.
.png)







English (US) ·