ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா...? நாடளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த பதில்

1 hour ago 5

Last Updated:Jul 23, 2026 4:29 PM IST

டெட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தின் 23-வது பிரிவில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளதா?

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், 2011-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

ஆசிரியர் தகுதி தேர்வு - நாடாளுமன்ற கூட்டத் தொடர்

ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், நடப்பு  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்ற்னர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

இந்நிலையில், 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக  மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் கர்நாடக பெல்லாரி காங்கிரஸ்  உறுப்பினர் ஈ.துக்காராம் எழுப்பினார். அவர் தனது கேள்வியில், " கல்வி உரிமை சட்டத்திற்கு முன்பு பணியமர்த்தப்பட்  ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வால் ஏற்படும் தாக்கத்தை மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதா? அப்படியென்றால், டெட் தேர்வு எழுத கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள பற்றிய விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளதா? டெட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தின் 23-வது பிரிவில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளதா? பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெற ஏதேனும் சிறப்பு செயல் திட்டங்கள் உள்ளதா?  இவர்களுக்கு ஏதேனும் இடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா? ஆகிய கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், " கல்வி அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் வருவதால், ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாக வரம்பிற்குள் வருகின்றன. எனவே, டெட் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அந்தந்த மாநில அரசுகளே பராமரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், தனது பதிலில், "உச்ச நீதிமன்றம் தனது 01.09.2025 தேதியிட்ட தீர்ப்பில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்23-வது பிரிவின்படி, பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கட்டாயமான குறைந்தபட்ச தகுதியாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனினும், உச்ச நீதிமன்றம் 29.05.2026 தேதியிட்ட சீராய்வு மனுவில்,  கல்வி உரிமை சட்டத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்  2028ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தகுதியான ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியைப் பெறுவதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட அரசுகள் ஆண்டுக்கு இருமுறை டெட் தேர்வுகளை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு - நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு தற்போது வாய்ப்பில்லை என்பதும்  அத்தகைய தொரு கருத்தோட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பதும் மட்டும் மத்திய அமைச்சர் அளித்த பதிலில் இருந்து தெளிவாகிறது.

“காலை உணவுத் திட்டத்திற்கு பழங்குடியினர் நிதி ரூ. 6 கோடி பயன்படுத்துவதா?” - டி.டி.வி. தினகரன் அதிருப்தி

  • ஸ்டாலின் கொண்டுவந்த காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்.

  • பழங்குடியினர் நிதியை பயன்படுத்துவதாக அரசாணை.

  • காட்டமாக விமர்சித்த டி.டி.வி. தினகரன்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article