புதுவையில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா? - ரங்கசாமி பதில் தர மறுப்பு

3 hours ago 8

Last Updated:Dec 21, 2025 8:58 PM IST

பாஜகவுடன் கூட்டணி தொடருகிறதா என்ற கேள்விக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதிலளிக்க மறுத்தார். 

ரங்கசாமி
ரங்கசாமி

பாஜகவுடன் கூட்டணி தொடருகிறதா என்ற கேள்விக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதிலளிக்க மறுத்தார்.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய செயல் தலைவர் நிதின் நபீன் புதுச்சேரி வந்தார்.  முதலமைச்சர் ரங்கசாமி இல்லம் அருகே உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலில் ரங்கசாமியும், நிதின் நபீனும் வழிபட்டனர்.

 தொடர்ந்து, ரங்கசாமியுடன் அவரது இல்லத்தில் நிதின் நபீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை குறித்த  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவர்  புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரியின் வளர்ச்சி பற்றி பேசினோம்.. புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேவையான நிதியை பெற எந்தெந்த துறைகளில் என்னென்ன செயலாம் என ஆலோசித்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது நன்றி” என்றார்.

அப்போது பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடருமா..?  தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா.? என்ற பல கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.  உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்றும் கூறினார்.

புதுச்சேரியில் நடைபெறும் சில அரசியல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, பாஜக கூட்டணியில் தொடருவதற்கு ரங்கசாமி சில நிபந்தனைகளை விதித்ததாகவும், அது கட்சித் தலைமையிடம் பேசி, முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தேசிய செயல் தலைவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article