Last Updated:October 14, 2025 7:39 AM IST
Omni bus hike | தீபாவளி பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து 10 ஆம்னி நிறுவனங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ள 10 ஆம்னி நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் பேருந்துகளை இந்த ஆண்டும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பிற புகார்களை தொலைப்பேசி, வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்க புகார் எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து போக்குவரத்து ஆணையர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச் சாவடிகளில் தனி வழி அமைக்கவும், அந்த வழிகளில் அரசு பேருந்துகள் விரைவாக செல்கின்றனவா என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் ஆவணங்களை சரிபார்க்கவும், அதில் விதிமீறல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 7:39 AM IST
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்.. நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!