இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

22 hours ago 13

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பிரம்மாண்ட வசூலை வாரிக் குவித்த லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

14

Lokah OTT Release Date

Lokah OTT Release Date

ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. அதிரிபுதிரியான ஹிட் அடித்த இப்படம் இந்தியாவில் ரூ.180.78 கோடி, வெளிநாட்டில் ரூ.119.3 கோடி என மொத்தமாக ரூ.300 கோடி வசூலித்து சரித்திரம் படைத்துள்ளது. 300 கோடி வசூல் அள்ளிய முதல் மலையாள படம் லோகா தான். லோகா மூலம் மலையாளத்தில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ ஃபிரான்சைஸைத் தொடங்கி உள்ளனர். துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை டொமினிக் அருண் இயக்கி இருந்தார். இப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.

24

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லோகா

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லோகா

இப்படம் ரிலீஸ் ஆகும் போது ப்ரீ-ரிலீஸ் விளம்பரங்கள் மூலம் பெரிய ஒன்று வரப்போகிறது என்ற உணர்வை ஏற்படுத்தினாலும், படக்குழுவினர் வேண்டுமென்றே பெரிய ஹைப்பை உருவாக்கவில்லை. படத்தின் புதுமையான உலகத்தைப் பற்றி பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே ஒரு எண்ணம் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். அந்த முடிவு வெற்றி பெற்றதை வெளியீட்டிற்குப் பிறகு காண முடிந்தது. வெளியான நாளிலேயே இப்படம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய படம்' என்ற கருத்தைப் பெற்றது. அதன்பிறகு பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது லோகா.

34

லோகா ஃபிரான்சைஸ்

லோகா ஃபிரான்சைஸ்

இந்த படத்தின் வெற்றி தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இயக்குனர் டொமினிக் அருண், நடிகை கல்யாணி, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் உள்ளிட்ட முழு 'லோகா' குழுவினருக்கும் உரியது. வெறும் 30 கோடி பட்ஜெட்டில் 'லோகா சாப்டர் 1 சந்திரா' உருவானது. இதன் தொடர்ச்சியாக 'லோகா'வின் அடுத்தடுத்த பாகங்கள் வரவிருக்கின்றன. முதல் பாகத்தில் காணப்பட்ட டோவினோவின் 'சாத்தன்', துல்கரின் 'ஒடியன்', மம்மூட்டியின் 'மூத்தோன்' ஆகியோர் வெவ்வேறு படங்களாக மீண்டும் ரசிகர்கள் முன் வருவார்கள்.

44

லோகா ஓடிடி ரிலீஸ் தேதி

லோகா ஓடிடி ரிலீஸ் தேதி

'லோகா' ஃபிரான்சைஸில் மிகச்சிறிய படம்தான் முதல் பாகமான 'சந்திரா' என்று இயக்குநர் டொமினிக் அருண் கூறியுள்ளார். அடுத்த பாகத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வரும் முன் லோகா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஓடிடியிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article