களக்காடு, அக். 13- திருநெல்வேலி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் செய லாக்கவுரை வழங்கினார். மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி, மாவட்ட துணைச் செயலாளர் மாரி.கணேசு, மாநகர செயலாளர் வெயிலுமுத்து, மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் தச்சை பகுதி தலைவர் இரா.கருணாநதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
28.10.2025 அன்று களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபிஆட்சி, ‘இதுதான் திராவிடம் திராவிடமாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் தொடர் பரப்புரைக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என்றும், பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
முத்துராமன் நன்றிகூற கூட்டம் நிறைவுபெற்றது.