இந்தியா திரும்பும் சோழர் காலத்துச் செப்பேடுகள்: மோடி மகிழ்ச்சி

1 hour ago 8

5cb8d472-b2c8-4936-96b4-a57edca74484

30 கிலோ எடை கொண்ட, 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டு உள்ளன. - படம்: மாலை மலர்

புதுடெல்லி: நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்’ இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஒவ்வோர் இந்தியருக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தச் செப்பேடுகள் சோழர்களுடைய பெருமையைக் குறிப்பிடுவதுடன், அவற்றில் உலகின் மிக அழகிய மொழிகளில் ஒன்றான தமிழில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

30 கிலோ எடை கொண்ட 21 செப்பேடுகள் ஒரு வெண்கல வளையம் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளன. அதில், முதலாம் ராஜேந்திர சோழனின் முத்திரை உள்ளது.

17ஆம் நூற்றாண்டில் டச்சு நாட்டைச் சேர்ந்த ஃபுளோரென்‌ஷியஸ் கேம்பர் என்பவர் அந்தச் செப்பேடுகளை நெதர்லாந்துக்குக் கொண்டுசென்றார்.

தற்போது யுனெஸ்கோ தலையீடு காரணமாக, அந்தச் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

“சோழர் செப்புத் தகடுகள் என்பவை 21 பெரிய தகடுகள், 3 சிறிய தகடுகள் அடங்கிய ஒரு தொகுப்பாகும். அவை, முதலாம் ராஜேந்திர சோழன், அவரின் தந்தை முதலாம் ராஜராஜன் அளித்த வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன,” என்று மோடி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தகடுகள் சோழர்களின் பெருமையைப் பறைசாற்றுவதாகவும் சோழர்கள், கலாசாரம், கடற்படை பலம் ஆகியவை குறித்து இந்திய மக்கள் பெருமை கொள்வதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article