பிரிவதாக அறிவித்து விட்டு இன்ஸ்டாவில் மீண்டும் இணைந்த பிரபல ஜோடி... என்ன நடந்தது தெரியுமா?

51 minutes ago 8

Last Updated:May 17, 2026 5:45 PM IST

மௌனி ராயின் நெருங்கிய தோழியும் நடிகையுமான திஷா பதானி, இன்ஸ்டாகிராமில் சூரஜ் நம்பியாரைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறியுள்ளது. 

நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார்
நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார்

சமீபத்தில் பிரிவதாக அறிவித்த பிரபல ஜோடி இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பிரபலமான நடிகை மௌனி ராய் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் ஆகியோர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று கோவாவில் பாரம்பரிய மலையாளி மற்றும் பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழப் போவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மௌனி ராய் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் இருவரும் பிரிந்து செல்வதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.

மேலும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் தேவையற்ற வதந்திகளைத் தவிர்க்குமாறும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்குத் தேவையான தனிமனித சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரையொருவர் 'அன்ஃபாலோ' (Unfollow) செய்ததை நெட்டிசன்கள் கவனித்து விவாகரத்து வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர். இந்த நிலையில், தங்களின் பிரிவை முறைப்படி அறிவித்த சில நாட்களிலேயே, தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் சூரஜ் நம்பியாரும், மௌனி ராயும் ஒருவரையொருவர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே புதிய விவாதங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மௌனி ராய் தனது கணக்கு பக்கத்தில் தனது திருமணப் புகைப்படங்கள் மற்றும் சூரஜுடன் இருக்கும் பழைய படங்களை இன்னும் நீக்காமல் அப்படியே வைத்துள்ளார். ஆனால், சூரஜ் நம்பியாரின் பக்கத்தில் மௌனியின் முகம் தெளிவாகத் தெரியாத ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே தற்போது இடம் பெற்றுள்ளது.

இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே புதிய விவாதங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article