”இயக்குநர் ராஜூ முருகன் ஒரு சைக்கோ” நடிகர் சசிகுமார்

2 hours ago 14

Last Updated:Feb 08, 2026 7:46 AM IST

மை லார்ட் திரைப்பட அறிமுகத்தில் சசிகுமார், ராஜூ முருகனை சைக்கோ என நகைச்சுவை பேசினார். பாலா, மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சசிகுமார் - ராஜூ முருகன்
சசிகுமார் - ராஜூ முருகன்

ராஜூ முருகன் கதை சொல்ல வந்த போது தான் அச்சம் அடைந்ததாக நடிகர் சசிகுமார் கலகலப்பாக பேசியுள்ளார். நல்ல படங்களை கொடுப்பதற்காக உழைப்பதில், இயக்குநர் ராஜூ முருகன் ஒரு சைக்கோ என்று நடிகர் சசிகுமார் நகைச்சுவையாக பேசினார்.

சசிகுமார், சைத்ரா ஆகியோர் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மை லார்ட்” திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற திரைப்பட அறிமுக சந்திப்பில் இயக்குநர்கள் பாலா, த.செ.ஞானவேல், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், மைலார்ட் திரைப்படம் பார்த்துவிட்டு உறக்கம் வரவில்லை என்றும், அறத்தை பேசும் முக்கியமான திரைப்படம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய இயக்குநர் பாலா, ராஜூ முருகனை வைத்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் அமைச்சராகிவிடுவர் என கலகலப்பூட்டினார். சசிகுமாரின் நடனத்தையும் மைக்கேல் ஜாக்சனுடன் ஒப்பிட்டு ஜாலி கூட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சசிகுமார், ராஜூமுருகனை சைக்கோ என்று மற்றவர்கள் தவறாக புரிந்துவைத்திருப்பதாக குறிப்பிட்டார். நல்ல படங்களை கொடுப்பதற்காக உழைப்பதில், இயக்குநர் ராஜூ முருகன் ஒரு சைக்கோ என்றார்.

இறுதியாக பேசிய இயக்குநர் ராஜூ முருகன், தனது முந்தைய படங்கள் தோற்றாலும் எந்த தோல்வியும் ஒரு மனிதரின் ஆற்றலை எதுவும் செய்துவிடாது என்பதை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அம்பேத்குமார், கவிஞர் யுகபாரதி, நடிகை சைத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Location :

Chennai,Tamil Nadu

Read Entire Article