Last Updated:May 15, 2026 4:31 PM IST
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றதும், அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக தனது உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது. 500 யூனிட்டுக்கு மேல் மின்சார பயன்பாடு கொண்ட வீடுகளுக்கு ஏற்கெனவே உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்தார்.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எனவும் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை டாஸ்மாக் நிர்வாகம் விடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், கடந்த அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என உறுதி அளித்தார். அந்தவகையில் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவ மாணவியருக்கு மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இதே போன்று, முந்தைய திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பணத்தை தவெக அரசு, ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதம் முதல் 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை ஜனவரி 1 ஆம் தேதிக்கு கணக்கிட்டு உயர்த்துவதாக அறிவித்துள்ளார். அதன்படி மாநிலத்திலும் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2 சதவீதம் அதிகரித்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல்" என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.
தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.
.png)







English (US) ·