இஸ்ரேல் லெபனான் சண்டைநிருத்தம் 45 நாள்கள் நீட்டிப்பு: அமெரிக்கா

1 hour ago 10

e261397b-1daa-4eb6-b1f6-ecca70d1747f

தென்பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த வாகனம். - படம்: நியுயார்க் டைம்ஸ்

USA: Israel-Lebanon Ceasefire Extended by 45 Days

The U.S. announced Israel and Lebanon agreed on Saturday to extend their temporary ceasefire for another 45 days, aiming for a political solution. Israeli and Lebanese officials held intensive talks in Washington before the original agreement expired Sunday. Despite the ceasefire, Israel targets Hezbollah fighters with airstrikes, claiming these are justified retaliation and do not violate the agreement. Hezbollah, not represented in the talks, is a challenge for the Lebanese government. The U.S. State Department invited military officials for talks on May 29, with a meeting for a permanent solution scheduled for June 2-3.

Generated by AI

வாஷிங்டன்: இஸ்ரேலும் லெபனானும் நடப்பில் இருக்கும் தற்காலிக சண்டை நிறுத்தத்தை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்து இருநாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா சனிக்கிழமை (மே 16) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 17) முடிவடைய இருந்த தற்காலிகச் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்க, இஸ்ரேல், லெபனான் அதிகாரிகள் வாஷிங்டனில் கடந்த இரண்டு நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இதற்கிடையே சண்டை நிறுத்தத்தை மீறுவதாகாது என்று கூறி, இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் போராளிகளைத் தென் லெபனானில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதால் இந்த பதலடியை அது நியாயப்படுத்துகிறது.

மேலும் சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ஆதரவோடு செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பிரதிநிதிக்கப்படவில்லை. அது இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைகிறது.

லெபனான் அரசாங்கம் ஹிஸ்புல்லா அமைப்பினரை கட்டுக்குள் கொண்டுவரப் போராடிவருகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு சண்டை நிறுத்த நீட்டிப்பை அறிவித்ததோடு இருநாட்டு ராணுவ அதிகாரிகளை மே 29ஆம் தேதி வாஷிங்டனுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இஸ்ரேல், லெபனான் பூசலுக்கு நிரந்தரத் தீர்வுக்கான அரசியல் தலைவர்களின் சந்திப்பு ஜூன் 2, 3 ஆகிய இரு தேதிகளில் இடம்பெறும் என்ற விவரங்களை அமைச்சின் பேச்சாளர் டாமி பிகொட் தெரிவித்தார்.

Read Entire Article