‘பேங் பேங்’ படக்குழுவினருடன் வடிவேலு. - படம்: தினமலர்
பிரபு தேவாவும் வடிவேலுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம் ‘பேங் பேங்’.
ஷாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ள அந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இப்படம் முழுநீள நகைச்சுவைப் படைப்பாக உருவாகி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறப்பிட்டுள்ளார்.
வடிவேலு, பிரபுதேவா இருவரும் ‘காதலன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தின் பெரும் வெற்றியை அடுத்து, ‘ராசய்யா’, ‘லவ் பர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘எங்கள் அண்ணா’ உள்ளிட்ட மேலும் பல படங்களில் அவர்கள் இணைந்து நடித்தனர்.
அந்த வகையில் ‘பேங் பேங்’ படமும் வெற்றிகரமாக அமையும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
.png)







English (US) ·