Last Updated:May 13, 2026 11:08 AM IST
"உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் முன்னிலையிலேயே பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், முகத்தை மூடிக்கொண்டு யார் முதலமைச்சர் விஜய் இல்லத்திற்கு சென்றார்கள்? என்றும், ஜோதிடர் ராதன் பண்டிட் முதல்வரின் சிறப்பு பணி அலுவரலாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விஜய்க்கு எதிராக தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.
தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று வரை பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கெடு விதித்திருந்தார்.
அதன்பேரில், தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். காங்கிரஸ் வழிமொழிந்தது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
"ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு ஏன் அரசுப் பதவி?
பேரவையில் இந்த தீர்மானம் மீது பேசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், "முதலமைச்சராக விஜய் செய்த நல்ல விஷயங்களையும் நாம் பாராட்டி இருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல், அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும், மரபையும் நீங்க ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே பெண்களை பாதுகாக்கவும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. முதலில் 717 மது கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. இவை அனைத்தையும் தேமுதிக வரவேற்கிறது." என்றார்.
இருப்பினும் முதல்வர் அவர்களே நீங்கள் அன்றைக்கு பதவி ஏற்கும்போது உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் என்று சொன்னீர்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் முதல் முறையாக மன வேதனையாக சொல்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் சொல்லும் போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயம் ஏற்பட்டது மன வேதனை அடைகிறேன். இங்கு யாரும் முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லையென என முதலமைச்சர் கூறினார். ஆனால் முதலமைச்சரை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு சென்றார் என்பதை முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதற்கு மேல் தலைக்குனிவு இல்லை. முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு திரட்டிக்கொண்டிருந்த பரபரப்பான அரசியல் சூழலில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு இன்னோவா காரில் முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாகச் சென்ற நபர் யார்? என்பதை விஜய் வெளிப்படையாக விளக்க வேண்டும்." என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"ஜனநாயகத்தை நம்பி இளைஞர் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். வரும் காலத்திற்கும், இளைஞர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கு மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த ஆட்சி நல்ல ஆட்சியாக இருக்க வேண்டும்" என பிரேமலதா தெரிவித்தார்.
First Published :
May 13, 2026 11:08 AM IST
" உங்க ராஜகுருவை தனிப்பட்ட ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம் எதற்கு அரசு பதவி?"" - பேரவையில் விளாசிய பிரேமலதா விஜயகாந்த்
.png)








English (US) ·