உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான எழுத்தாளர் மணிமாலாவின் சிறுகதைப் பயிலரங்கு

17 hours ago 14

b41951c2-9ea5-4087-9888-8f9daf110264

எழுத்தாளர் மணிமாலா மதியழகன் நடத்தவுள்ள பயிலரங்கு, மே 23 காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது.  - படம்: தேசிய நூலக வாரியம்

Writer Manimala's Short Story Workshop for High School Students

A short story workshop, part of the 'Writers' Studio Programme' by the National Arts Council and National Library Board, will encourage creativity in high school students. Local author Manimala Mathiyazhagan will conduct the workshop at the National Library on May 23 (10 AM-12 PM). Participants will learn to write historical and news-based short stories, turn scenes into stories, and understand key story elements. Registration is required by May 10, 2026, via a web address, with priority for the first 30 students. Author Manimala Mathiyazhagan can be contacted at 87258701 for more details.

Generated by AI

தேசியக் கலை மன்றம், தேசிய நூலக வாரியம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘எழுத்தாளர்கள் ஆய்வகத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலையும் எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் சிறுகதைப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளூர் எழுத்தாளர் மணிமாலா மதியழகன் நடத்தவுள்ள இப்பயிலரங்கு,  மே 23ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் வரலாற்றுச் சிறுகதைகளை எழுதும் முறைகள், அன்றாடச் செய்திகளைச் சுவையான சிறுகதைகளாக மாற்றுவது எப்படி, ஒரு காட்சியைச் சிறுகதையாக்கும் நுட்பமான உத்திகள், ஒரு சிறந்த சிறுகதைக்கான முக்கியக் கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

பயிலரங்கில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் https://forms.gle/4KTFv6zzVzz82cge9 என்ற இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

முதலில் பதிவு செய்யும் 30 மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இப்பயிலரங்கு தொடர்பான விவரங்களை அறிய எழுத்தாளர் மணிமாலா மதியழகனை 87258701 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

Read Entire Article