எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்...! என்ன தான் பண்றீங்கன்னு லஞ்ச ஒழிப்புத் துறையை லெப் ரைட் வாங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

4 hours ago 13

நீதிபதி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என கூறக்கூடும்.

2 Min read

Published : Oct 14 2025, 08:33 AM IST

14

 எஸ்.பி.வேலுமணி

Image Credit :

Asianet News

எஸ்.பி.வேலுமணி

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ள உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணை வந்தது.

24

சென்னை உயர்நீதிமன்றம்

Image Credit :

chennai high court

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ். கந்தசாமி, மற்றும் கே.விஜயா கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளித்து அறப்போர் இயக்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

34

லஞ்ச ஒழிப்புத் துறை

லஞ்ச ஒழிப்புத் துறை

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து அனுப்பக் கூறி, விண்ணப்பத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவணங்கள மொழிபெயர்க்கும் பணிக்கு கூடுதல் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பணிகளை முடித்து, மத்திய அரசு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

44

 நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இதனைக் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என முன்னாள் அமைச்சர் கூறக்கூடும். எனவே மக்கள் நம்பிக்கையை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கருத வேண்டும். நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தனது வலுவை இழந்து விடும் என காட்டமாக தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Read Entire Article