‘பிராம்ப்ட் பொறியியல்’ அம்சத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அதைப் பாடத்திட்டத்தில் கொண்டுவரப் போவதாக அமைச்சர் ராஜ்கோமகன் குறிப்பிட்டார். - சித்திரிப்புப் படம்: ஃபார்ட்யூன்
சென்னை: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது ஒருபோதும் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்காது என்று தமிழகக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கல்வி கற்கும் சூழல் மாறி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், கற்றலை இனிமையான அனுபவமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
தமிழகப் பாடத்திட்டத்தில் ‘பிராம்ப்ட் எஞ்சினியரிங்’ என்ற பிரிவு அறிமுகப்படுத்துப்படும் என்றும் மனிதர்களின் வேலைவாய்ப்பை ‘ஏஐ’ ஒருபோதும் பறித்துவிடாது என்றும் திரு ராஜ்மோகன் கூறினார். எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார் அவர்.
‘பிராம்ப்ட் பொறியியல்’ அம்சத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அதைப் பாடத்திட்டத்தில் கொண்டுவரப் போகிறோம்.
“நாம் அனைவரும் சிறு வயதில் நிலாச்சோறு சாப்பிட்டிருப்போம். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் பள்ளிக் குழந்தைகள் இன்று செயற்கைக்கோளை உருவாக்க வேண்டும்.
“அந்தச் சின்னச் சின்ன செயற்கைக் கோள்களுக்கும் ‘இஸ்ரோ’வில் இடமளிக்கப்பட்டால் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் நிலவை மட்டுமல்லாமல் இந்திய தேசத்தையும் வட்டமிடும். அதற்கான கல்வித் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்,” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.
.png)






English (US) ·