ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பல கோடி ரொக்கப்பணம் பறிமுதல்

2 hours ago 18

732e35ec-bb78-4a03-bc2e-12f9f37d3cc1

அதிகாரி மொகந்தி வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம். உள்படம்: மொகந்தி - படம்: இந்து தமிழ் திசை

புவனேஸ்வர்: மாநில சுரங்​கத் துறை துணை இயக்​குநர் லஞ்சப் புகாரின் பேரில் கைதான நிலையில், அவரது வீட்டில் இருந்து ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேவபிரதா மொகந்​தி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24 ) அன்று நிலக்கரி விற்பனைக்கு உரிமம் பெற்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார் திரு மொகந்தி. அப்போது காவல்துறையினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

இதையடுத்து, அவரது வீடு, அவரது பெற்றோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஒரே ளையில் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரிகளில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

மொகந்தியின் அலுவலக மேசை டிராயரில் ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர, மாநிலத் தலைவர் புவனேஸ்வரில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டுக்கான ஆவணங்கள், 130 கிராம் தங்கம் ஆகியவையும் காவல்துறையினரின் சோதனை நடவடிக்கையின்போது கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, மொகந்தி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Read Entire Article