Last Updated:October 14, 2025 10:50 AM IST
PMK | பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிற அதிர்ச்சி அளிக்கிற ஒரு துரதிஷ்ட சம்பவமாக பார்க்கப்படுகிறது என அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லாவிட்டால் அனைவருக்கும் தாழ்வு..." என பாமக உட்கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி கருத்து தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடியது. இன்று தொடங்கி வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பேரவை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக, பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே. மணியை நீக்க வலியுறுத்தி, அக்கட்சியின் அன்புமணி தரப்பில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இன்று சட்டபேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அந்தக் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பா.ம.க. விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி பேசியாதவது:-
"பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவாகச் செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது மற்றும் அதிர்ச்சி அளிக்கிற துரதிஷ்ட சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியவர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா (ராமதாஸ்) . எந்த பதிவிக்கும் போகாதாவர். வன்னியர்கள் உட்பட எல்லாச் சமுதாயங்களுக்கும் சமூக நீதிப் பிரச்சினைகளுக்காகப் போராடி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வலிமையான சக்தி.
ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்தது கவலை அளிக்கிறது; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு; பாமகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். இப்படி ஒரு சோதனை வந்தது வருத்தம் அளிக்கிறது. பலமான கட்சியைப் பலவீனப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. ராமதாஸ் அவர்களின் நியமனம்தான் செல்லும்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 10:50 AM IST