Last Updated:October 13, 2025 7:36 PM IST
சினிமாவை பொருத்தளவில் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆரவாரம் செய்த ரசிகர்களை தனது செய்கையால் நடிகர் அஜித் குமார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், குட் பேட் அக்லி படத்திற்கு பின்னர் கார் ரேஸ்களில் கவனம் செலுத்துகிறார். அவரது தலைமையில் செயல்படும் அஜித்குமார் ரேஸிங் என்ற அணி உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை குவித்து வருகிறது.
சினிமாவை பொருத்தளவில் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே அஜித் தான் பங்கேற்கும் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் லோகோவை தனது ரேஸ் கார்களில் பொருத்தி பங்கேற்கிறார். இதற்காக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அஜித்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அஜித்தை பார்க்க சென்ற ரசிகர்கள் அவரை நோக்கி ஆரவாரம் எழுப்பி விசில் அடித்தனர். இதனால் டென்ஷனான அஜித் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கைகளால் கூடாது என்ற அர்த்தத்தில் சிக்னல் செய்தார்.
அஜித் நடிக்கும் அடுத்த படத்துடைய கதை குறித்து சமிபத்தில் கூறிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஆக்சன் பொழுதுபோக்கு படமாக அஜித்தின் அடுத்த படம் அமையும் என்று கூறியிருந்தார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 7:32 PM IST