Last Updated:Dec 20, 2025 8:30 PM IST
வீட்டு மாடி தோட்டத்தில் கொத்தமல்லி கட்டு கட்டாக அறுவடை செய்யலாம் அதற்கான படிப்படியான குறிப்புகளை இங்கே முழு விவரங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு மாடித்தோட்டத்தில் பொதுவாக புதினா கொத்தமல்லி ஆகியவற்றை வளர்ப்பது பெரும்பாலானோருக்கும் விருப்பமான ஒன்றாகும். அத்துடன் அன்றாட சமையலுக்கு பயன்படுத்த நாமே விளைவித்த காய்கறிகள் ஆரோக்கியமாகவும் எந்த ஒரு ரசாயனமும் இல்லாமலும் அப்படியே சமையலுக்கு பயன்படுத்துவது மகிழ்ச்சியை தரும்.
அந்த வகையில் வீட்டு மாடி தோட்டத்தில் பெரும்பான்மையாக வளர்க்கப்படுவது கொத்தமல்லி செடி. கொத்தமல்லி மாடி தோட்டத்தில் வளர்ப்பதற்கான முறையான விவரங்கள் படிப்படியான வளர்ப்பு முறைகளை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் கொத்தமல்லி வளர்க்கும் தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோ பீட்களை நிரப்பி தண்ணீர் ஊற்றி அதனை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி நன்கு செழித்து வளர ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் நன்கு தரமான விதைகளை பார்த்து வாங்கி விதைக்க வேண்டும் அப்போதுதான் நல்ல விளைச்சல் நமக்கு கிடைக்கும்.
நிறைய பேருக்கு முளைக்காதற்கான காரணம் தரமான விதைகள் எங்கேயும் கிடைப்பதே இல்லை. தரமான ஒரு அக்ரோ சர்வீஸ் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் விதைகளை வாங்கிக்கலாம். தரமான விதைகளை வாங்கிய பின்னர் அதனை நன்கு இரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த விதைகளை தொட்டிகளில் தூவி விட வேண்டும். பின்னர் அதன் மேல் ஒரு இன்ச் அளவிற்கு மீண்டும் கோக்கோ பீட்டை தூவி விட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஸ்ப்ரே செய்து விட வேண்டும். கொத்தமல்லி வளர மிதமான வெப்பநிலை தேவை, அந்த வெப்பநிலையில் வைத்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். இவ்வாறு செய்யும்போது ஐந்து மற்றும் ஆறாவது நாட்களில் செடி நன்கு செழித்து வளர ஆரம்பித்து விடும். உரம் எதுவும் இல்லாமல் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும் 27 நாட்களில் கொத்தமல்லி வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும்.

கவுகாத்தி விமான நிலைய சர்வதேச முனையம் திறப்பு.. பிரதமர் பெருமிதம்
கவுகாத்தி விமான நிலையம் 4 ஆயிரம் கோடியில் நவீனமாக கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்தார்
லோக்பிரிய கோபிநாத் பர்டோலி சிலை மற்றும் விமான நிலையம் திறப்பு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்
அசாம் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கியதாகவும், மாநில வளங்களை பாதுகாப்பது முக்கியம் என மோடி கூறினார்
.png)






English (US) ·