எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வி.பி. ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதா சட்டமாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வி.பி. ஜி ராம் ஜி எனப்படும் 'விக்சித் பாரத்—ரோஜ்கார் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (VB--G RAM G) மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வி.பி. ஜி ராம் ஜி மசோதா நடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வி.பி. ஜி ராம் ஜி மசோதா சட்டமாகியுள்ளது
வி.பி. ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வி.பி. ஜி ராம் ஜி சட்டம் கிராமப்புற வேலைவாய்ப்புக் கொள்கையின் மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்று குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக வி.பி. ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தை தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கி வந்த நிலையில், புதிய சட்டம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஏற்கெனவே இருந்ததை விட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் இது மாநிலங்களுக்கு பெரும் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
மேலும் புதிய வி.பி. ஜி ராம் ஜி சட்டத்தில் விவசாய அறுவடை காலங்களில் 60 நாட்கள் வேலையை நிறுத்தலாம் என்ற விதி உள்ளதல் இது ஏழைத் தொழிலாளர்களின் வருமானத்தைப் பாதிக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. ஆகவே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வி.பி. ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
.png)
2 hours ago
14







English (US) ·