Last Updated:October 14, 2025 7:06 AM IST
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தை பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மொத்த படமும் கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. 90களில் தென்மாவட்டங்களில் நடந்த கதை என்பதை ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றன.
குறிப்பாக லால், அமீர் கதாபாத்திரங்கள் ஸ்டைலிஷாகவும், முரட்டுத்தனத்துடனும் காட்சிப்படுத்தபட்டிருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னாவின் பிண்ணனி இசையில் சந்தோஷ் நாராயணின் சாயல் தெரிகிறது. காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. அனுபமா, ரஜிஷா இருவரும் கிராமத்து பெண்களாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
பசுபதி பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. “கபடியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்”, ‘நம்மல மாதிரி ஆளுங்க புத்திய தூக்கி முன்னாடி வைக்கலன்னா, அங்க கத்திய வைச்சு குத்திட்டு போய்டே இருப்பாங்க” போன்ற வசனங்கள் ஷார்ப். ‘பைசன்’ படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 7:06 AM IST