காதல் திருமணம் செய்த மகள்.. மருமகனை ஆணவப் படுகொலை செய்த மாமனார்

13 hours ago 13

Last Updated:October 13, 2025 3:25 PM IST

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மருமகனை சரமாரியாக வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சந்திரன் - ராமச்சந்திரன்
சந்திரன் - ராமச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மருமகனை சரமாரியாக வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32) பால் வியாபாரியான இவர் அதே பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தியும் காதலித்துள்ளனர். ஆர்த்தி, கரூரில் ஒரு தனியார் கல்லூரியில் B.com இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்த்தியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ராமச்சந்திரனும், ஆர்த்தியும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி, ராமச்சந்திரனும், ஆர்த்தியும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  ஆர்த்தியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்காத நிலையில், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆர்த்தியின் தந்தை சந்திரனுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு அன்று மாலையில் கூட்டாத்து அய்யம்பாளையம் பாசனக்கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த ராமச்சந்திரனை, ஆர்த்தியின் தந்தை சந்திரன் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.

தகவல் அளிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார், சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மருமகனை சரமாரியாக வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 3:25 PM IST

Read Entire Article