"கிட்னியை ரெடி பண்ணுங்க.." ஐபோன் 18 ப்ரோ வருது! டிசைன் முதல் பேட்டரி வரை.. லீக் ஆன ரகசியங்கள்!

3 hours ago 20

iPhone 18 ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் லீக்ஸ் இதோ! புதிய டிசைன், 5100mAh பேட்டரி மற்றும் A20 சிப்செட் என 2026-ல் வரவுள்ள ஆப்பிளின் அதிரடி மாற்றங்கள் பற்றி அறியுங்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாக இன்னும் பல மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்குள்ளாகவே இணையத்தில் இந்த போன்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன. 2026-ம் ஆண்டு வெளியாகவுள்ள இந்த பிளாக்ஷிப் மாடல்களில் மிகப்பெரிய டிசைன் மாற்றங்கள், மேம்பட்ட கேமரா ஹார்டுவேர் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆப்பிளின் புதிய A20 ப்ரோ சிப்செட் மூலம் இதன் வேகம் வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியான லீக்ஸ் பற்றிய முழு விவரங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

புதிய வடிவமைப்பு மற்றும் ஃபேஸ் ஐடி மாற்றங்கள்

ஐபோன் 18 ப்ரோ சீரிஸின் முன்பக்க டிசைனில் ஆப்பிள் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அளவை சுருக்கி அல்லது முற்றிலுமாக மாற்றி, 'அண்டர்-டிஸ்பிளே ஃபேஸ் ஐடி' (Under-display Face ID) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது திரையில் ஒரு சிறிய பஞ்ச்-ஹோல் கேமராவாக மேல்பக்க ஓரத்தில் அமையலாம். பின்புறம் வழக்கம் போல ட்ரிபிள் கேமரா செட்டப் இருந்தாலும், கிளாஸ் மற்றும் ஃப்ரேம் டிசைனில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். டீப் பர்பிள், பர்கண்டி மற்றும் டார்க் பிரவுன் போன்ற புதிய நிறங்களில் இந்த ஐபோன்கள் களமிறங்கும் எனத் தெரிகிறது.

அதிரடி கேமரா அப்டேட்கள்

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஐபோன் 18 ப்ரோ ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதில் 'வேரியபிள் அப்பர்ச்சர்' (Variable Aperture) சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படலாம். இது குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்கவும், பின்புலத்தை இயற்கையாக மங்கலாக்கவும் (Background Blur) உதவும். சாம்சங் நிறுவனத்தின் புதிய 'திரீ-லேயர் ஸ்டேக்டு சென்சார்' (3-layer stacked sensor) இதில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் போட்டோக்களில் நாய்ஸ் குறைந்து, துல்லியம் அதிகரிக்கும்.

சக்திவாய்ந்த A20 ப்ரோ சிப்செட் மற்றும் பேட்டரி

ஐபோன் 18 சீரிஸில் TSMC-யின் 2nm தொழில்நுட்பத்தில் உருவான அதிவேகமான A20 ப்ரோ சிப்செட் பயன்படுத்தப்படவுள்ளது. ரேம் (RAM) நேரடியாக ப்ராசஸருடன் இணைக்கப்படுவதால், போனின் வேகம் 15% வரை அதிகரிக்கும் மற்றும் பேட்டரி சேமிப்பு 30% வரை மேம்படும். ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5,100mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி இடம்பெறலாம். இதனால் போனின் தடிமன் மற்றும் எடை (240 கிராமுக்கு மேல்) அதிகரிக்கக்கூடும்.

டிஸ்பிளே மற்றும் வெளியீட்டு விவரங்கள்

டிஸ்பிளே அளவுகளில் பெரிய மாற்றம் இருக்காது. ஐபோன் 18 ப்ரோ 6.3 இன்ச் திரையுடனும், ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் திரையுடனும் வெளியாகும். ஆப்பிள் வழக்கம்போல 2026 செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும். விலையைப் பொறுத்தவரை, ஐபோன் 17 ப்ரோ சீரிஸின் விலையை அடிப்படையாகக் கொண்டு (இந்தியாவில் சுமார் ரூ. 1.35 லட்சம் முதல்), உதிரிபாகங்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கலாம்.

Read Entire Article