Last Updated:Dec 21, 2025 2:54 PM IST
Sreenivasan | உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல மலையாள நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீனிவாசனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

மலையாளத் திரையுலகில் நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் எனப் பல முகங்கள் கொண்ட ஸ்ரீனிவாசன். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவு வெளியிட்டு இரங்கல் தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கொச்சினில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா ஸ்ரீனிவாசன் மறைவை கேள்விப்பட்டு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஸ்ரீனிவாசனின் மறைவால் கலங்கிய ரசிகர்கள் அவரின் பழைய வீடியோக்கள், பேச்சுக்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சமத்துவம் மற்றும் மதம் பற்றி ஸ்ரீனிவாசன் பேசிய பழைய வீடியோ கவனம் பெற்று வருகிறது. அந்த வீடியோவில், "1984-ல் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். பெரிய வருமானம் இல்லை. ஆனால் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்தேன். காதல் என்பது வருமானத்தை பார்த்து வருவது இல்லையே.
நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யவிருந்தேன். இதற்காக ஊருக்குச் செல்வதை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகரிடம் கூறியபோது அவர் தனது மனைவியின் தங்கத்தை அடமானம் வைத்து 400 ரூபாய் கொடுத்தார். வீட்டிற்குச் சென்றபோது என் மனைவிக்குத் தங்கத்தில் தாலி வாங்க வேண்டும் என எனது அம்மா கண்டிப்புடன் கூறினார். தங்கம் வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. என் தாயோ தங்கத் தாலி என்பதை கண்டிப்புடன் கூறிவிட்டார்.
என்ன செய்வதென்று யோசித்த நான் அந்த இரவே இஸ்லாமிய நடிகர் வீட்டிற்குச் சென்று 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு வந்தேன். இப்படி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் இந்துப் பெண்ணான எனது மனைவிக்குத் தங்கத்தில் தாலி வாங்கிக் கட்டினேன். அந்தக் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் நடிகர் இன்னாசென்ட், இஸ்லாமியர் நடிகர் மம்மூட்டி." என்று தனது திருமணத்தில் நடந்த சமத்துவத்தை நினைவு கூர்ந்தார். இந்த வீடியோ தற்போது ஸ்ரீனிவாசன் மறைவை அடுத்து வைரலாகி வருகிறது.

'நம்ம ரன்' மாரத்தான் போட்டி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
'நம்ம ரன்' மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
சிறுவர்கள் முதல் முதியோர் வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு.
பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் மக்கள் திரண்டனர்.
.png)




English (US) ·