கூட்டுக் களவாணியாக மாறிய சிந்தாமணி... ரோகிணிக்கு தெரியவரும் விஜயாவின் பிளான் - சிறகடிக்க ஆசை அப்டேட்

23 hours ago 17

சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதியை சந்தித்து தன்னுடைய பிளானை எல்லாம் சொல்லி இருக்கிறார் விஜயா, அதனை மொத்தமாக ரோகிணியிடம் போட்டுக் கொடுத்துள்ளார் சிந்தாமணி.

2 Min read

Published : Feb 07 2026, 10:56 AM IST

15

Siragadikka Aasai Serial Today Episode

Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜை தன் வழிக்கு கொண்டு வர ரோகிணி பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். அதன் ஒருபகுதியாக பார்க்கில் தன்னை நோட்டம் விட்ட மனோஜை, வாட்ச்மேன் அடிக்க வர அவரை காப்பாற்றி இருக்கிறார் ரோகிணி. மனோஜும் அவரை தன்னுடைய மனைவி என ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேபோல் மனோஜ் - ரோகிணியின் டைவர்ஸ் கேஸில், ஸ்ட்ராங் ஆன ஆதாரம் தேவைப்படுவதால் வித்யாவை சாட்சிக்கு அழைக்கலாம் என ஐடியா கொடுக்கிறார் முத்து. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25

சாட்சிக்கு ஆள் திரட்டும் முத்து - மீனா

Image Credit : jiohotstar

சாட்சிக்கு ஆள் திரட்டும் முத்து - மீனா

முத்துவும், மீனாவும் முருகனையும், வித்யாவையும் வர வைத்து, வருகிற புதன்கிழமை டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வருகிறது. அதற்கு நீ வந்து சாட்சி சொல்ல வேண்டும் என வித்யாவிடம் கேட்கிறார்கள். வித்யாவும் சிறிது யோசனைக்கு பின்னர் சம்மதிக்கிறார். தான் கோர்ட்டில் உண்மையை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன் என கூறுகிறார் வித்யா. அதுமட்டுமின்றி கறிக்கடைக் காரர் மற்றும் மணியையும் சாட்சிக்கு அழைத்து வர வேண்டும் என கூறுகிறார் முத்து.

35

பார்வதியிடம் உதவி கேட்கும் விஜயா

Image Credit : jiohotstar

பார்வதியிடம் உதவி கேட்கும் விஜயா

மறுபுறம் விஜயா தன்னுடைய தோழி பார்வதியை பார்ப்பதற்காக செல்கிறார். அப்போது பார்வதி தன்னுடைய யூடியூப் சேனலுக்காக பொம்மை வேஷம் போட்டுக்கொண்டு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன்பின்னர் சிந்தாமணியும் அங்கு வர, விஜயா அவர்களிடம் முக்கியமான விஷயத்தை சொல்கிறார். பார்வதியை சாட்சிக்காக கோர்ட்டுக்கு அழைக்கும் விஜயா, நான் சொல்வதைப் போல் ஜட்ஜிடம் சொல்ல வேண்டும் என கூறுகிறார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் பார்வதி, நீ சொல்ற மாதிரி பொய்யெல்லாம் சொல்ல முடியாது. உண்மையை வேண்டுமென்றால் சொல்றேன் என சொல்லிவிடுகிறார்.

45

ரோகிணியிடம் போட்டுக் கொடுத்த சிந்தாமணி

Image Credit : jiohotstar

ரோகிணியிடம் போட்டுக் கொடுத்த சிந்தாமணி

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், விஜயாவும் பார்வதியும் என்னவெல்லாம் பேசுகிறார்களோ அதையெல்லாம் ரோகிணி போன் வாயிலாக கேட்டுவிடுகிறார். அங்கிருக்கும் சிந்தாமணி ரோகிணிக்கு போன் போட்டு அதை கேட்க வைக்கிறார். விஜயாவுடன் சேர்ந்துகொண்டு அவருக்கே சிந்தாமணி குழிபறிக்கிறார். இந்த விஷயம் தெரியாமல் விஜயா, சிந்தாமணியுடன் நெருங்கிப் பழகுவதோடு, எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். சிந்தாமணி வாயிலாக விஜயாவின் பிளானை எல்லாம் ரோகிணி ஒட்டுக் கேட்டு விடுகிறார். இதனால் கோர்ட்டில் தரமான சம்பவம் காத்திருக்கிறது.

55

மீண்டும் சேரும் ரவி - ஸ்ருதி

Image Credit : jiohotstar

மீண்டும் சேரும் ரவி - ஸ்ருதி

மறுபுறம் கறிக்கடைக் காரர் மணியை சந்திக்கும் முத்து மற்றும் மீனா, அவரையும் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் வர மறுத்த மணி, அதன் பின்னர் ஒத்துக் கொள்கிறார். ரவி நேராக ஸ்ருதியை சென்று சந்திக்கிறார். அவரிடம் நான் இனிமேல் உன்னுடைய ஓட்டலில் வேலை செய்யலாம்னு இருக்கேன் என சொல்கிறார். அதற்கு ஸ்ருதி, உன்னையை இந்த ஓட்டலுக்கு பார்ட்னராக வர சொன்னா நீ வேலை பார்க்க வர்றேன்னு சொல்ற, எது எப்படியோ நீ வந்தா போதும் என சொல்கிறார். ஆனால் இன்னொரு கண்டிஷனையும் போடும் ரவி, நீத்து ரெஸ்டாரண்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு உன் அப்பாவிடம் காசு வாங்கிக் கொடு என கேட்கிறார் ரவி. அதற்கு ஸ்ருதி, நான் எதுக்கு அவர் கிட்ட கேட்கணும், நீயே கேட்டுக்கோ, நான் கேட்க வேண்டும் என்றால், அந்த நீத்து, உன்னை காதலிக்கவில்லை என சொல்லி சோசியல் மீடியாவில் வீடியோ போட வேண்டும் என சொல்கிறார் ஸ்ருதி. இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Read Entire Article