கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்தார்

3 hours ago 13

கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Published:Just NowUpdated:Just Now

ராகுல் காந்தியுடன் கண்ணன் கோபிநாதன்

ராகுல் காந்தியுடன் கண்ணன் கோபிநாதன்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார்.

கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். அதிகாரிகள் சிலர் அடையாளம் கண்ட பிறகுதான் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனத் தெரியவந்தது.

காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்

காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்

இந்த நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார் கண்ணன் கோபிநாதன். இதன் காரணமாக அவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மின்சார வாரிய செயலர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் 370, 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகக் கூறி தனது பதவியைக் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார்.

பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகளே ஆன நிலையில் தனது 33-வது வயதில் ஐ.ஏ.எஸ் பொறுப்பை ராஜிநாமா செய்திருந்தார் கண்ணன் கோபிநாதன். 27 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தும் அவர் ராஜினாமா செய்த சம்பவம் அந்தச் சமயத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

அதே சமயம் அரசு கொடுத்த பணிகளை அவர் உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை எனவும், அதற்காக அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்கே ராஜினாமா நாடகம் ஆடுவதாக பா.ஜ.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ராஜினாமா செய்தபிறகு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தவர் இப்போது திடீரென காங்கிரஸில் இணைந்துள்ளார்.ஆ

கண்ணன் கோபிநாதன்

கண்ணன் கோபிநாதன்

டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார் கண்ணன் கோபிநாதன்.

கேரளாவைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அவருக்கு அடையாள அட்டை வழங்கி காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் குடிமக்களுக்காக கட்சி எனவும், குடிமக்களை நோக்கி பயணிப்பதுதான் எனது லட்சியம் எனவும் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.

கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article