Last Updated:Feb 16, 2026 4:41 PM IST
இப்பாம்பிற்கு இருதலை மணியன், மண் மலைப்பாம்பு, சிறிய மலைப்பாம்பு எனப் பல பெயர்கள் உண்டு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்" என்ற பழமொழிக்கேற்ப, பாம்புகள் என்றாலே பொதுமக்களிடையே ஒருவிதமான அச்சம் நிலவுவது இயல்பானது. பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 58,000 பேர் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர். இதற்கு, முக்கிய காரணம் பாம்புகளை பற்றிய தவறான புரிதல்களும் அதனால் உண்டாகும் அதீத பயங்களும் தவறான முதலுதவிகளுமே பல நேரங்களில் மரணத்திற்கு இட்டுச் செல்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் வாழ்கின்றன. இதில், 'பிக் ஃபோர்' (Big Four) எனப்படும் நான்கு வகை பாம்புகளே (கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன்) அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன.
அந்த வகையில், பாம்பு இனங்களிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, அதேசமயம் மூடநம்பிக்கைகளால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினம் 'சிவப்பு மண்ணுளிப் பாம்பு' (Red Sand Boa) ஆகும். இதன் விசித்திரமான உடல் அமைப்பு காரணமாக பரப்பப்படும் பல்வேறு வதந்திகள்ஸ்நேக் மதுரையைச் சேர்ந்த 'ஸ்னேக் சகா' முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் பாம்புபுடி நிபுணர் ஆவார்.
மண்ணுளிப் பாம்பிற்கு இருதலை மணியன், மண் மலைப்பாம்பு, சிறிய மலைப்பாம்பு எனப் பல பெயர்கள் உண்டு. இவை இளம்பருவத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத்துடனும், ஆங்காங்கே கருப்பு கோடுகளுடனும் காணப்படும். வளர வளர, உடலில் உள்ள கோடுகள் மறைந்து முற்றிலும் வெளிறிய சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன.
மண்ணுளிப் பாம்பு கடித்தாலோ அல்லது அதன் நாக்குநீர் உடலில் பட்டாலோ அரிப்பு ஏற்படும் என்றும் கைகால்கள் செயலிழக்கும் என்றொருவொரு கருத்து நீண்டகாலமாக மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இதில் துளியும் உண்மையில்லை என ஸ்நேக் சகா குறிப்பிடுகிறார். மண்ணுளிப் பாம்புகள் முற்றிலும் விஷமற்றவை என்றும் தெரிவித்தார். இது மனிதர்களை சீண்டுவது அரிது. வயல்வெளிகளில் உள்ள எலிகள் மற்றும் தவளைகளை உணவாகக் கொள்வதால், இவை விவசாயிகளின் நண்பனாகவே திகழ்வதாக தெரிவித்தார்.
இப்பாம்பிற்கு 'இருதலை மணியன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாலேயே, இதற்கு இரண்டு தலைகள் இருப்பதாகப் பொதுமக்களிடையே ஒரு தவறான நம்பிக்கை நிலவுகிறது. ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முன் பக்கத் தலையைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்லும் என்றும், அடுத்த ஆறு மாதங்கள் அதன் வால் பகுதியில் உள்ள தலையைப் பயன்படுத்திப் பின்னோக்கி நகரும் என்றும் ஒரு வினோதமான கட்டுக்கதை காலங்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மையில், இப்பாம்பிற்கு ஒரு தலை மட்டுமே உள்ளதக ஸ்நேக் சகா தெரிவித்தார். இப்பாம்பின் வால் பகுதி மழுங்கி, தடிமனாக அதன் தலை போன்றே தோற்றமளிக்கும் என்றும் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான இயற்கை பரிணாமம் என்றும் தெரிவித்தார். பாம்புகளால் முன்னோக்கி மட்டுமே நகர முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.
மண்ணுளிப் பாம்புகள் பெரும்பாலும் நிலப்பரப்பிற்கு அடியில், அதாவது மண்ணின் உள்பகுதியில் தான் வசிக்கின்றன. இவை ஒரு பகுதியில் வாழ்வதே அந்த இடத்தின் மண் செழிப்பாக இருப்பதற்கான அடையாளம் என்று ஸ்நேக் சகா குறிப்பிடுகிறார். இவை மண்ணிற்கு அடியில் ஊர்ந்து செல்லும்போது, மண்ணைத் தளர்த்தி காற்றோட்டத்தை (Aeration) அதிகரிக்கின்றன. இது தாவரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்லவும், நீர் எளிதில் ஊடுருவவும் வழிவகுப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்த பாம்புகள் மருத்துவக் குணமிக்கவை என்றும், சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் விலை போகும் என்றும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இத்தகைய வதந்திகளை நம்பிப் பாம்புகளைப் பிடித்து சட்டப் சிக்கல்களில் சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மண்ணுளிப் பாம்புகளைப் பிடிப்பதோ அல்லது கடத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
இரவு நேரங்களில் உணவு தேடி (எலி, தவளை அல்லது கோழிக்குஞ்சுகள்) குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் இந்த பாம்புகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எதிர்பாராத விதமாக இவை கடித்தாலும், விஷம் ஏறாது என்பதால் பயப்பட வேண்டாம்; இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி முதலுதவி பெற்றுக் கொள்வது சிறந்தது என்றும் அறிவுரை வழங்கினார்.

‘அழைப்பிதழே தரப்படவில்லை’.. நெல்லை புத்தக திருவிழாவை புறக்கணித்த எழுத்தாளர் செ.திவான்
திருநெல்வேலி புத்தக திருவிழாவில் எழுத்தாளர் செ. திவானுக்கு அழைப்பிதழே வழங்கப்படவில்லை
190-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய செ. திவான், அழைப்பிதழில் பெயர் இல்லாததை வருத்தமாக கூறினார்
முதல்வருக்கும் கல்வி அமைச்சருக்கும் ஆதங்கம் தெரிவித்து கடிதம் அனுப்பியதாக செ. திவான் தெரிவித்தார்
.png)





English (US) ·