Last Updated:Apr 06, 2026 5:14 PM IST
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக (SC) ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். 219 என்ற எண் கொண்ட இந்தத் தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ராஜா வெற்றி பெற்ற இடமாகும். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் செவல்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்தாலும், 2021-ல் திமுக வெற்றி பெற்று, தற்போது 2026 தேர்தலிலும் கடும் போட்டிய நிலவும் களமாக, திமுக-அதிமுக இடையே நேரடிப் போட்டிக்கு வழிவகுத்துள்ளது. சங்கரன்கோவில் தனி தொகுதியில் ஆண்கள் 1,11,338 பேரும், பெண்கள் 1,17,168 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 15 பேர்கள் என மொத்தம் 2,28,521 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொகுதியாகும்.
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக சார்பில் வேட்பாளராக டாக்டர்.ஜெ.திலீபன் ஜெய்சங்கர்(29) அறிவிக்க பட்டுள்ளார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தென்காசி அதிமுக வடக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 29 வயதான இவர் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். மனைவி அபர்ணா தேவி மருத்துவராக உள்ளார். சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஜெய்சங்கர் நெல்லை மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பணியாற்றியவர். இவரது தாயார் சரஸ்வதி செங்கல்பட்டு மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆவார். இவர்கள் இருவருமே செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம் பகுதி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி உள்ளனர். திலீபன் ஜெய்சங்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்து தற்போது மாவட்ட மருத்துவர் அணி செயலாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜா தற்போது வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சங்கை கணேசன் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன் தந்தை சங்கையா என்ற குட்டி வழக்கறிஞர் ஆக இருந்து வருகின்றார். சங்கை கணேசன் எம் ஏ பி எல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரின் சொந்த ஊர் சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளானை கோட்டை ஆகும். இவர் மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் (1990-1991), நெல்லை, தூத்துக்குடி மாணவர் காங்கிரஸ் தலைவர் (1993- 1995), சேலம் சட்டக் கல்லூரி மாணவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் (1995-1998),மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (1998-2005), நெல்லை மாவட்ட மேற்கு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் (2001-2016), தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் (2019-2020), தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் (2021 - 2023) ஆகிய பதவிகளை வகித்தவர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் அண்ணன் மகன் ஆவார்.
சங்கரன்கோவில் தொகுதிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக கவிதா.மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் Bsc,Botany மற்றும் B.ED பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் இவர் தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர் பத்து ஆண்டு கட்சியில் பயணித்து வருகின்றார்.இவரது கணவர் அரிச்சந்திரன்.வெ ஆவார். இவர் MA, M Phil (Tamil) முடித்துள்ளார். இவரின் கணவர் தொழில் விவசாயம் செய்து கொண்டு இசேவை மையம் நடத்தி வருகினறார். இவர் சிவகிரி தாலுகாவில் பட்டக்குறிச்சி வசித்து வருகிறார் .
சங்கரன்கோவில் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராமராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் MCA சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் காந்திநகர் பகுதியில் சங்கரன்கோவில் வசித்து வருகின்றார். தமிழக வெற்றி கழகம் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவார். இவரது மனைவி சூர்யா (எ)அகல்யா, தமிழக வெற்றிக்கழக தென்காசி மாவட்ட இணை செயலாளர் ஆவார்.
அஇபுதமமுக-வின் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம் பி வசந்தி முருகேசன் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் தனித்தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வித்தகுதி எம்.இ. ஆகும். இவர் தந்தை இருளப்பன் ஓய்வு பெற்ற போஸ்ட்மேன் ஆவர். தாய் ஜீவா, மனைவி முருகலட்சுமி ஆவர். இவர் தொழில் தனியார் கல்லுாரி முதல்வர் ஆவார். இவர் கரிவலம்வந்தநல்லுார் வீரனாபுரம் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக உறுப்பினர் மற்றும் தற்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவர்.

இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம்!
விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டம்.
.png)




English (US) ·