14

Image Credit : Seeman
234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்
தமிழகத்தில் வரக்கூடிய ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
24
Image Credit : Asianet News
காரைக்குடியில் களம் இறங்கும் சீமான்
அதன்படி 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு உட்பட்ட காரைக்குடியில் களம் இறங்குகிறார்.
34
Image Credit : our own
நட்சத்திர வேட்பாளர்கள்..
234 வேட்பாளர்களில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்தி வேதாரண்யம் தொகுதி, இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதி, வீரப்பண் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
44
Image Credit : X/Seeman
காரைக்குடியை குறி வைத்தது ஏன்..?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சிவகங்கை தொகுதியில் மட்டும் 16.81 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையை தக்கவைத்தது. அதன் அடிப்படையில் சீமான் காரைக்குடியில் களம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
.png)
1 hour ago
19







English (US) ·